728x90 AdSpace

Latest News

கிளாமருக்காக மட்டுமே பெண் கேரக்டர்கள் நித்யா கோபம்

தென்னிந்திய மொழிப் படங்களில், பெண் கேரக்டர்களை கிளாமருக்காக மட்டுமே பயன்படுத்துகிறார்கள்’ என்று சொன்னார், நித்யா மேனன். இதுபற்றி மேலும் அவர் கூறியதாவது:சமீபத்தில் தமிழில் என் நடிப்பில் மூன்று படங்கள் வந்தன. அனைத்திலும் வித்தியாசமான கேரக்டர் கிடைத்தது.

தொடர்ந்து மூன்று படங்கள் வந்ததும், அதில் வித்தியாசமான கேரக்டர்கள் கிடைத்ததும் எனது அதிர்ஷ்டம். மணிரத்னம் இயக்கியிருந்த ‘ஓ காதல் கண்மணி’ படத்தில் நடித்தது மறக்க முடியாத அனுபவம். அந்த கேரக்டரை விட, லாரன்சின் ‘காஞ்சனா 2’ படத்தில் ஊனமுற்ற பெண்ணாக நடித்தது எனக்குப் பிடித்திருந்தது. அது பேய் படமாக இருந்தாலும் கூட, அதில் என் கேரக்டர் சவாலானதாக அமைந்தது. நான் நடிக்கும் படங்களைப் பற்றிய

நிலைப்பாடு ஒன்று வைத்துள்ளேன்.

 திரைக்கதை பிடிக்கவில்லை என்றால், நிச்சயமாக அந்தப் படத்தில் நடிக்க மாட்டேன். சினிமாவில் கதையை எப்படிச் சொல்கிறார்கள் என்பதுமுக்கியம். கதாபாத்திரத்தைப் போல், திரைக்கதையும் முக்கியமானதாகும். தென்னிந்திய மொழிப் படங்களில் எப்போதும் ஹீரோ ஆதிக்கம்தான் அதிகமாக இருக்கிறது. பெண்ணின் கதாபாத்திரங்களை, கிளாமருக்காக மட்டுமே பயன்படுத்துகிறார்கள். இந்த நிலை தொடர்ந்து வருகிறது. இந்த நிலை மாற வேண்டும். பெண் கேரக்டருக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கிளாமருக்காக மட்டுமே பெண் கேரக்டர்கள் நித்யா கோபம்
  • Title : கிளாமருக்காக மட்டுமே பெண் கேரக்டர்கள் நித்யா கோபம்
  • Posted by :
  • Date : 21:56
  • Labels :
  • Blogger Comments
  • Facebook Comments
Top