விஜய் மில்டன் இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் படம் ’10 எண்றதுக்குள்ள’. இதில் விக்ரம் ஜோடியாக நடிகை சமந்தா முதல்முறையாக இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் டப்பிங் பணிகளையும் நேற்று அவர் முடித்து கொடுத்துள்ளார்.
இதனை டிவிட்டரில் அறிவித்த சமந்தா, பட வெளியீட்டுக்காக தான் காத்துக்கொண்டிருப்பதாக கூறியுள்ளார். இப்படம் வரும் அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி ஜெயந்தி விடுமுறையை முன்னிட்டு திரைக்கு வருகிறது. அதே தேதியில் தனுஷ் ஜோடியாக இவர் நடித்துள்ள ‘விஐபி 2′ திரைப்படமும் வெளியாகும் என சொல்லப்படுகிறது.